உயிர்களிடத்தில் அன்பு காட்டுவோம்
வாசு படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். அவனது வகுப்பில் எப்படியும் முதல் மூன்று நிலைக்குள் வந்துவிடுவான். மூன்றாம் தரம் படித்துக்கொண்டிருந்த அவனிடம் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அன்பாக இரந்தார்கள்.
வீட்டில் வாசு மிகவும் குறும்புக்காரன். கிளி, மைனா, குருவி போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வளர்ப்பான். தும்பிப் பூச்சை கயிற்றில்கட்டி பறக்கவிட்டு வேடிக்கைப் பார்ப்hன். ஒருமுறை வாசு அவ்வாறு தும்பியை கயிற்றால் கட்டி விளையாடிக் கொண்டிருக்கும் போது அவனது தந்தை அதைக் கண்டுவிட்டார். அவர் வாசுவைக் கண்டிதத்hர். ஆனாலும் வாசு தனது குறும்புத்தனத்தை விடவில்லை.
ஞாயிற்றுக் கிழமை ஒன்றில் வாசுவின் அப்பா காய்கறிகள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றிருந்தார். அம்மாவும் ஆடைகளைக் கழுவுவதற்காக கிணற்றடிப் பக்கம் சென்றிருந்தாள். அப்போது அறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வாசு கண்விழித்துப் பார்த்தான். அப்போது காற்றின் வேகத்தால் அறைக் கதவு தானாக மூடப்பட்டிருப்பதை உணர்ந்நதான். பயந்துபோன வாசு அழுது கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் வாசுவின் தந்தை அவனுக்குப் பிடித்த காய்கறி, பழங்கள் என்பவற்றை வாங்கிக்கொண்டு வந்தார். அப்போது அவருக்கு வாசு அழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கதவு மூடிக் கொண்டுவிட்டதை அறிந்த அப்பா உடனே சென்று கதவைத் திறந்தார். வாசு பயத்தால் அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தந்தை வாசுவிடம்
ஷபார்த்தாயா வாசு கதவு தன்னால் மூடிக் கொண்டதற்கே நீ இப்படி பயந்து அழுகிறாயே... நீ வளர்க்கும் பறவைகள் எல்லாம் கூண்டுக்கள் அடைப்பட்டு எவ்வளவு வேதனையுடன் இருக்கும் என்பதை இப்போதாவது யோசித்துப்பார்| என புத்திமதி சொன்னார்.
வாசு அதனை உணர்ந்து இனிமேல் உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என எண்ணிக்கொண்டான். அதன்பின்பு வீட்டிலும், பாடசாலையிலும் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டான்!!!